Home Hot News ஜனவரி 19ஆம் தேதி முதல் கம்போங் பத்து தாலத்தில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

ஜனவரி 19ஆம் தேதி முதல் கம்போங் பத்து தாலத்தில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

கோலாலம்பூர், ஜனவரி 18 :

பகாங், ரவூப்பில் உள்ள கம்போங் பத்து தாலம், முக்கிம் பத்து தாலம் ஆகிய இடங்களில் ஜனவரி 19 முதல் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKPD) அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முகமட் சாட் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பகுதியில் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆபத்து மதிப்பீடு மற்றும் போக்குகள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஜனவரி 19ஆம் தேதி (புதன்கிழமை) முதல் – பிப்ரவரி 1ஆம் தேதி வரை மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKPD) அமலில் இருக்கும் என்று, முகநூலில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

Previous article97.1% குடும்பத் தலைவர்கள் வெள்ள நிவாரண நிதியை பெற்றுள்ளனர் – NADMA தகவல்
Next articleகோவிட் தொற்றினால் நேற்று 16 பேர் பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version