Home Hot News மலாக்காவில் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு தம்பதி உட்பட மூவர் கைது!

மலாக்காவில் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு தம்பதி உட்பட மூவர் கைது!

மலாக்கா, ஜனவரி 19 :

நேற்று (ஜனவரி 18) அதிகாலை இங்குள்ள தாமான் ஆயிர் மோலேக்கில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு தம்பதியினர் உட்பட மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் என நம்பப்படும் 35 கிராம் போதைப்பொருளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மலாக்கா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) தலைவர் சுல்கிப்ஃலி ராஷிட் இதுபற்றிக் கூறுகையில, நள்ளிரவு 12.30 மணியளவில் 24 வயதுடைய இளைஞர், அவரது 31 வயது காதலி, 22 வயதுடைய அவரது சகோதரனுடன் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்களும் வேலையில்லாதவர்கள், அந்தப் பெண் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான போதைப்பொருள் சோதனையில், இரண்டு ஆண்களும் மார்பினுக்கு நேர்மறையாகவும், அந்தப் பெண் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பாவித்து இருப்பது உறுதியானது.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர். அனைத்து சந்தேக நபர்களும் 1952 ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகள் சட்டம், பிரிவு 39B மற்றும் 15(1)(a) இன் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக நேற்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரையான காலப்பகுதியில்ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 274 பேர் கைது செய்யப்பட்டதாகவும், RM22,821.50 மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சுல்கிப்ஃலி கூறினார்.

காவல்துறை தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் மற்றும் அமலாக்கத்தை செய்யும் என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க, காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Previous article Maktab Mahmud in Tobiarஇல் 106 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
Next articleBukti menunjukkan Azam Baki kendali, kawal akaun dagangannya – SC

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version