Home உலகம் ஓமிக்ரான் பரவலைத் தவிர்க்க, தனது சொந்த திருமணத்தையே நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!

ஓமிக்ரான் பரவலைத் தவிர்க்க, தனது சொந்த திருமணத்தையே நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!

புதிய கோவிட் கட்டுப்பாடுகளை நியூசிலாந்து நாட்டில் அறிவித்ததையடுத்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவல் அதிகரித்து பிறகு முழு நாடும் மிக மேம்படுத்தப்பட்ட அளவிலான கோவிட் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (11:00 GMT) அமலுக்கு வருகின்றன.

அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் ஆனது.

வரும் பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தினசரி தொற்று அந்நாட்டில் 70ஐ தாண்டியுள்ளது.

இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

கிளார்க் கேஃபோர்ட் உடனான தனது திருமணம் நடைபெறாது என்பதை திருமதி ஆர்டெர்ன் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

“என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.

‘பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

38 வயதாகும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கடந்த ஜூன் மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் ஒரு நாட்டின் பிரதமாக இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்த இரண்டாவது பிரதமர் என்ற பெயரையும் பெற்றார்.

மேலும் நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 94 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 56 விழுக்காட்டினர் பூஸ்டர்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleAidilfitri போது பயணத் தடை இருக்காது; தேவைப்பட்டால் EMCO மட்டும் என்கிறார் பிரதமர்
Next articleபிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version