Home மலேசியா குவாந்தானில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் பலி, நால்வர் காயம்

குவாந்தானில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் பலி, நால்வர் காயம்

குவாந்தான், ஜனவரி 24 :

நேற்று, இங்குள்ள பத்து 3, தானா பூத்தேக்கு அருகே ஜாலான் குவாந்தன்-மாரான் சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் 3 பேர் இறந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

பகாங் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் கமாருல்ஜமான் ஜூசோ கூறுகையில், இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் புரோட்டான் ஈஸ்வாரா மற்றும் புரோட்டான் சாகா வகையான இரண்டு கார்கள் மோதிக்கொண்டன.

கொல்லப்பட்டவர்கள் புரோட்டான் ஈஸ்வாரா கார் ஓட்டுநர் அட்ஸாருல் ஃபட்ஸ்லி அஹ்மட் ரோகி (33), புரோட்டான் சாகாவில் பயணித்த அசுரா இஸ்கந்தர் முகமட் (32) மற்றும் அவரது ஐந்து வயது மகள் நூர் இசாரா அல் ஆயிஷா முகமட் ஃபைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ ஊழியர்கள் அறிவித்தனர், என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவரான அசுராவின் கணவர் முகமட் ஃபைரஸ் முகமட் யூசோப்,(40), மற்றும் அவர்களது மற்ற மூன்று குழந்தைகள் முகமட் அல் ஹபீஸ் இக்ராம், (11); நூருல் அல் அசியானா அஷிகின், (10); மற்றும் தலை, கால்கள் மற்றும் கைகளில் காயம் அடைந்த முகமட் அல் அலிஃப் இக்மல், (9), ஆகியோர் சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கம்பாங்கிலிருந்து குவாந்தானை நோக்கி புரோட்டான் ஈஸ்வாரா காரில் தனியாகச் சென்ற அட்ஸாருல் ஃபாட்ஸ்லி ஓட்டிச் சென்ற வாகனம், கட்டுப்பட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் இருந்த முகமட் ஃபைரஸ் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா மீது மோதியதில், இந்த விபத்து நடந்ததாக அறியமுடிகிறது.

“விபத்தின் விளைவாக, இரண்டு வாகனங்களும் சறுக்கி சாலை அருகில் சாய்ந்தன. பின்னர் புரோட்டான் ஈஸ்வரா கார் தீப்பிடித்து எரிந்தது.

“விபத்து பற்றிய தகவல் அல்லது அதை நேரில் பார்த்த பொதுமக்கள், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரணையில் உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு துணை இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தேரா மஹ்கோத்தா, தாமான் தாஸ் மற்றும் குவாந்தன் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 16 பணியாளர்கள் இரவு 11.34 மணிக்கு இந்த விபத்து பற்றிய அழைப்பு வந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

புரோட்டான் ஈஸ்வரா கார் 100 சதவீதம் எரிந்த நிலையில், அதற்குள் சிக்கிக் கொண்ட பெண் ஓட்டுநரின் சடலம், எரிந்த நிலையில் ஹைட்ராலிக் மீட்பு கருவியைப் பயன்படுத்தி காரிலிருந்து வெளியே அகற்றப்பட்டது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version