Home மலேசியா நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்கு போதைப்பொருள் முக்கிய பங்காற்றுகிறது; சரவாக் காவல்துறை ஆணையர்

நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்கு போதைப்பொருள் முக்கிய பங்காற்றுகிறது; சரவாக் காவல்துறை ஆணையர்

கூச்சிங், ஜனவரி 24 :

ரோயல் மலேசியன் காவல்துறை (PDRM), குறிப்பாக மாநிலத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் சரவாக் காவல்துறை நான்கு திசைகளிலும் கண்காணிப்பை அதிகரித்துள்ளதுடன் அதனை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது என்று சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ அய்டி இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போது சமூகத்தின் மிகப்பெரும் கவலையாக உள்ள போதைப்பொருளை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதில் தனது துறை மிகவும் கவனம் செலுத்துகிறது. இது குற்றவியல் வழக்குகளின் அதிகரிப்புக்கு பங்களித்தது மட்டுமல்லாமல், போதைப்பொருள் பாவனை குடும்பம் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும் பங்களிக்கிறது என்றார்.

மேலும் இந்த விஷயத்தில், சரவாக் மாநிலம் போதைப்பொருள் குற்றங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்க அனைத்து காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

சரவாக் காவல்துறை தலைமையகத்தில் நடந்த சரவாக் காவல் ஆணையர்களின் மாதாந்திர கூட்டத்தில் அவர் இன்று உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, சரவாக் காவல்துறை ஒவ்வொரு பணியிலும் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதுடன், உயர்மட்ட தலைமை மற்றும் அணிக்கு விசுவாசத்தைக் காட்டுவதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

“எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், அது அணிக்கு (காவல்துறை) தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்துமா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

“காவல்துறை பற்றிய கெட்ட உருவகம் (imagination) சமூகத்திற்கு நாங்கள் பங்களிக்கும் அனைத்து தியாகங்களையும் சேவைகளையும் அழித்துவிடும்,” என்று அவர் கூறினார்.

“நான் நம்பிக்கையை நிறைவேற்றுகிறேன்” என்ற சொற்றொடருக்கு ஏற்ப ஊழல் நடைமுறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள், என்றார்.

அத்தோடு “காவல்துறைக்கும் சமூகத்திற்கும் இடையே நெருங்கிய உறவை உருவாக்குவதற்கும், விநியோக முறையை மேம்படுத்துவதற்கும் சமூக காவல் திட்டம் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version