Home Hot News நாடு முழுவதும் மூன்று நாட்களில் 3.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல்; 4,987...

நாடு முழுவதும் மூன்று நாட்களில் 3.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல்; 4,987 ஆண்கள் மற்றும் 213 பெண்கள் கைது !

கோலாலம்பூர், ஜனவரி 25 :

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) மொத்தம் 212.6 கிலோ மற்றும் 1,199.2 லிட்டர் அளவுகள் கொண்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் RM3.5 மில்லியனுக்கும் அதிகமாகும்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை இதுபற்றிக் கூறுகையில், நாடு முழுவதும் ஜனவரி 21 முதல் 23 வரை நடத்தப்பட்ட ‘Op Tapis Khas’ நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 5,200 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மாநில காவல்துறையினருடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

“மூன்று நாள் நடவடிக்கைகளின் போது, இளைஞர்கள் உட்பட 942 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்தனர், அதில் மொத்தம் 129 பேர் வெளிநாட்டினராவர்.

மேலும் “நடவடிக்கைகளின் போது 367 போதைக்கு அடிமையானவர்களின் கூடாரம் என நம்பப்படும் இடங்களும் சோதனை செய்யப்பட்டன” என்று, இன்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 முதல் 60 வயதுக்குட்பட்ட 4,987 ஆண்களும் 213 பெண்களும் அடங்குவர்.

விஷச் சட்டம் 1952 மற்றும் பிரிவு 30 (3) தவிர, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B, 39A (2), 39A (1), 39C, 12 (2), மற்றும் 6, அது தவிர ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 ஆகியவற்றின் கீழ் அனைத்து கைதிகளும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் இந்த நடவடிக்கைகளில், சரவாக் மற்றும் நெகிரி செம்பிலானில் வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், பேராக்கில் நடந்த ஒரு நடவடிக்கையின் போது, ​​பல தோட்டாக்களுடன் ஒரு ரிவால்வரையும் போலீஸார் கைப்பற்றியதாக அயோப் கான் கூறினார்.

அத்தோடு, இதன்போது மொத்தம் RM333,766 ரொக்கப் பணம் ; RM41,540 மதிப்புள்ள நகைகள்; RM1.58 மில்லியன் மதிப்புள்ள 34 வாகனங்கள்; மற்றும் RM391,700 மதிப்புள்ள 69 மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

சமூகத்தினரிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, the Jihad Dadah திட்டத்துடன், அனைத்துக் குழுக்களிலும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version