Home Hot News BSN MyRinggit-i Banjir திட்டத்திற்கான விண்ணப்பம் ஜனவரி 31 வரை திறந்திருக்கும்

BSN MyRinggit-i Banjir திட்டத்திற்கான விண்ணப்பம் ஜனவரி 31 வரை திறந்திருக்கும்

கோலாலம்பூர், ஜனவரி 26 :

BSN MyRinggit-i Banjir இன் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பதிவு ஜனவரி 31, 2022 வரை திறந்திருக்கும் என்று சிம்பனான் நேஷனல் (BSN) வங்கி இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 25 நிலவரப்படி, மொத்தம் 22,887 விண்ணப்பங்களுக்கு RM221 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் www.bsn.’com.my என்ற BSN இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் முழுமையான மற்றும் உண்மையான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களாக, அடையாள அட்டையின் நகல் ; பாதிக்கப்பட்ட வீட்டின் மின்கட்டணத்தின் நகல் மற்றும் பாதிக்கப்பட்ட வீடு தொடர்பான மாவட்ட அதிகாரி/JKKK/காவல்துறை அறிக்கையின் உறுதிப்படுத்தல் கடிதம் என்பன அடங்கும்.

JKKK என்பது Jawatankuasa Kemajuan dan Keselamatan Kampung அல்லது கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழுவைக் குறிக்கிறது.

ஜன. 31, 2022 க்கு முன் விண்ணப்பத்தில் கோரப்பட்ட தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்து, உண்மையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரரின் நிதி நெருக்கடிகளைக் குறைக்க, வங்கி உதவும்.

மேலும் “தனிப்பட்ட கடன்கள், வீட்டுக்கடன்கள், வாடகைக்கு வாங்குதல், கிரெடிட் கார்டுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மைக்ரோ நிறுவனங்களை உள்ளடக்கிய மாதாந்திர நிதித் தவணைகளை ஒத்திவைத்தல் போன்ற பிற வகையான உதவிகளும் பிஎஸ்என் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.bsn.com.my என்ற இணையதளத்தில் அல்லது 1300-88-1900 என்ற எண்ணில் உள்ள BSN வாடிக்கையாளர் தொடர்பு மையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version