Home Hot News சீனப்புத்தாண்டை முன்னிட்டு கூட்டரசு , மாநில சாலைகளில் வேக வரம்பு 10km/h ஆகக் குறைப்பு

சீனப்புத்தாண்டை முன்னிட்டு கூட்டரசு , மாநில சாலைகளில் வேக வரம்பு 10km/h ஆகக் குறைப்பு

கோலாலம்பூர், ஜனவரி 29 :

நாடு முழுவதுமுள்ள கூட்டரசு மற்றும் மாநில சாலைகளின் வேக வரம்பு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 8 வரை மணிக்கு 10 கிலோமீட்டர் (10km/h) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வரும் சீனப் புத்தாண்டு (CNY) 2022 கொண்டாட்டத்துடன் இணைந்து, நாட்டின் பொதுச் சாலைகளில் வேக வரம்புக் குறைப்பு இருப்பதாக போக்குவரத்து  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“நாடு முழுவதுமுள்ள கூட்டரசு சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் வேக வரம்பு 10km/h ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, கூட்டாட்சி சாலையின் வேக வரம்பு 90km/h முதல் 80km/h வரையும் மாநில சாலைகள் 80km/h முதல் 70km/h ஆகவும் குறைக்கப்பட்டு, ஜனவரி 25 முதல் பிப்ரவரி 8 வரை இது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

“பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பண்டிகைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த தற்காலிக வேக வரம்புக் குறைப்பு உள்ளது” என்று போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் நாட்டின் வீதிகளில் போக்குவரத்து நிலைமைகளை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு மற்றும் போலீசாருடன் ஒத்துழைக்கவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version