Home Hot News கோல திரெங்கானுவில் உள்ள 24 பகுதிகளில் தண்ணீரின் தரம் மாசு அடைந்துள்ளது

கோல திரெங்கானுவில் உள்ள 24 பகுதிகளில் தண்ணீரின் தரம் மாசு அடைந்துள்ளது

கோல திரெங்கானு, பிப்ரவரி 3 :

பூலாவ் மூசாங்கின் ஆற்றின் நுழைவாயிலில் உப்பு நீர் ஊடுருவியதைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் உள்ள 24 பகுதிகளில் தண்ணீரின் தரம் மாசு அடைந்துள்ளது.  அத்தோடு தண்ணீர் உவர்ப்பாக மாறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 31) இரவு முதல் இங்குள்ள புக்கிட் கேச்சில் டேங்க் மற்றும் புக்கிட் லோசாங் டேங்க் ஆகியவற்றில் ஏற்பட்ட நீரின் தரம் மாசு அடைந்தது குறித்து,Syarikat Air Terengganu Sdn Bhd (SATU) நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

“இது சம்பந்தமாக, கென்யிர் அணையில் உள்ள கச்சா நீரில் உப்பு செறிவு அளவை சமன் செய்ய Tasik Kenyir -TNB மின் உற்பத்தி நிலையத்திலிருந்து SATU உதவியைப் பெற்றுள்ளது.

“இந்த நிலைமையை TNB அறிந்திருக்கிறது மற்றும் அதிக அலை ஏற்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே தண்ணீர் விடப்படுகிறது. வழங்கப்பட்ட நீரின் உப்புத்தன்மை அளவீடுகளும் அவ்வப்போது கண்காணிக்கப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு ஏதேனும் கேள்விகள் மற்றும் புகார்கள் இருந்தால், www.satuwater.com.my, MySATU அப்ளிகேஷன், Facebook, Instagram போன்ற தகவல்தொடர்பு ஊடகங்கள் மூலம் நிலைமையின் புதுப்பிக்கப்படும் தகவலை அறியமுடியும் அல்லது 1300-88-2111 என்ற எண்ணில் வாடிக்கையாளர்கள் சேவையை அழைக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version