Home Hot News பயணிகள் படகு பழுதடைந்ததால் குவா படகுத்துறையில் முட்டி மோதிய மக்கள் கூட்டம்

பயணிகள் படகு பழுதடைந்ததால் குவா படகுத்துறையில் முட்டி மோதிய மக்கள் கூட்டம்

லங்காவி, பிப்ரவரி 3 :

இங்குள்ள குவா பயணிகள் படகுத்துறையில் நேற்று நண்பகல் மற்றும் நேற்றிரவு பயணிகள் மற்றும் படகு ஊழியர்களுக்கு இடையே நெரிசல் மற்றும் பதட்டமான சூழ்நிலையைக் காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இதற்கு படகு சேதம் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மலேசிய கடல்சார் துறையின் (JLM) வடக்கு பிராந்தியத்தின் இயக்குநர் முகமட் ஹபீஸ் அப்துல் மஜிட் இதுபற்றிக் கூறும்போது, பெரிய கொள்ளளவு கொண்ட படகு சேதம் அடைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார்.

“கடைசி நிமிடத்தில் ஒரு பெரிய கொள்ளளவு கொண்ட படகு சேதமடைந்ததால் பல பயணிகளின் பயணம் தாமதமானது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட 423 பயணிகளும் நேற்றிரவு 11.25 மணிக்கு Express Bahagia 99 வழியாக கோலா பெர்லிஸ் பயணிகள் படகுத்துறைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்,” என்று இன்று காலை இங்கு தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

நேற்று, குவா ஃபெர்ரி டெர்மினலில் பயணிகளுக்கும் படகுக் குழுவினருக்கும் இடையே நெரிசல் மற்றும் காரசாரமான வாக்குவாதங்களைக் காட்டும் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

காணொளிகளின் அடிப்படையில், லங்காவி-கோலா பெர்லிஸ் படகு சேவைகள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதை அடுத்து, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பயணிகள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version