Home Hot News கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிய முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிய முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், பிப்ரவரி 5 :

சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நகர மக்கள் வீடு திரும்பத் தொடங்கியுள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்குக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இது நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று ​​மாலை 4.30 மணி நிலவரப்படி, பெந்தோங் தைமூரில் புக்கிட் திங்கி மற்றும் கோம்பாக் டோல் பிளாசாவுக்கு முன் மேற்கு நோக்கிய போக்குவரத்து மிக நெரிசலாகவும் வாகனங்கள் மெதுவாகவும் நகர்ந்ததைக் காண முடிந்தது.

“தாப்பா RnR இலிருந்து புக்கிட் பேருந்தோங் வரை தெற்கில் இருந்து வாகன நெரிசல் பதிவாகியுள்ளது, மேலும் மேற்கு தலைநகர் பெந்தோங் தைமூர் முதல் பெந்தோங் டோல் பிளாசா வரையும் ஆக்கங்கள் மெதுவாக நகருகின்றன” என்று அவர் கூறினார்.

பெந்தோங் டோல் பிளாசாவிலிருந்து லெந்தாங்கிலிருந்து நேரடியாக புக்கிட் திங்கி வரையிலான சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகருகின்றன.

1-800-88-0000 என்ற ப்ளஸ்லைன் கட்டணமில்லா லைன் மற்றும் www.twitter.com/plustrafik என்ற டூவிட்டர் பக்கம் அல்லது 1-800-88-7752 என்ற LLM லைன் மூலம் அல்லது www.twitter.com/llminfotrafik என்ற அதன் டூவிட்டர் பக்கத்தில் பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகோவிட் தொற்று 9,117 – குணமடைந்தோர் 6,546
Next articleசிலாங்கூரில் ஒரு கிலோ கோழி 8 வெள்ளி என நிர்ணயம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version