Home இந்தியா இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

மும்பை, பிப்ரவரி 6:

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானர்.

இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.

1969இல் லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. 199இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

2001இல் பாரத் ரத்னா விருது அவருக்கு கிடைத்தது.1999ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை அவர் ராஜ்சபா உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version