Home மலேசியா Op Didik சோதனையின் போது  மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு சம்மன்

Op Didik சோதனையின் போது  மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு சம்மன்

புத்ராஜெயா, பண்டார் பாரு சலாக் திங்கியில் மேற்கொள்ளபட்ட Op Didik சோதனையின் போது  மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறை ஐந்து சம்மன்களை இன்று வழங்கியது. Sepang மாவட்ட காவல்துறைத் தலைவர் (IPD) உதவி ஆணையர் Wan Kamarul Azran Wan Yusof, சிப்பாங் மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவினரால் காலை 6.30 முதல் 8.30 வரை பள்ளிக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் மாணவர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 மாணவர்கள் மற்றும் 10 வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

சம்மன் வழங்குவது மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் இல்லை, பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை, ‘ஃபேன்சி’ நம்பர் பிளேட் (விதிகளின்படி இல்லை) ‘P’ ஒட்டதாது  போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு ஆலோசனை வழங்கினர். பள்ளிக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பெற்றோர்கள் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் காவல்துறை அறிவுறுத்துகிறது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version