Home மலேசியா 15 கி.மீட்டர் துரத்தப்பட்டு ஓட்டுநர் பக்க கண்ணாடியை உடைத்து கைது செய்யப்பட்ட 38 வயது பெண்ணுக்கு...

15 கி.மீட்டர் துரத்தப்பட்டு ஓட்டுநர் பக்க கண்ணாடியை உடைத்து கைது செய்யப்பட்ட 38 வயது பெண்ணுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

கோத்த கினபாலுவில் திருடப்பட்ட நான்கு சக்கர வாகனத்தில் பல வாகனங்களை சேதப்படுத்திய  35 வயது பெண்ணுக்கு எதிராக போலீசார் ஏழு நாட்கள் தடுப்புக் காவலை பெற்றிருக்கின்றனர். மலேசியரான அவரை பிப்ரவரி 21 வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டின் உத்தரவைப் பெற்றதாக கோத்த கினாபாலு நகர காவல்துறை துணைத் தலைவர் ஜார்ஜ் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இதுவரை இரண்டு வாகன உரிமையாளர்கள் தங்கள்  கார்கள் அப்பெண் மோதியதாகக்  போலீஸ் புகார்களை அளித்துள்ளனர். மேலும் பலர் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், துரத்தலின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தபால்காரர் கீழே விழுந்தார். அவர்  சம்பவம் குறித்து புகாரளிக்க இன்னும் வரவில்லை என்று  ஜார்ஜ் கூறினார். ரவுண்டானாவுக்கு அருகில் உள்ள லிக்காஸ் பே கடற்கரை சாலையில் இருந்து பெண் வேகமாக வெளியேறியபோது ​​அவரது மோட்டார் சைக்கிள் மோதியதால், தபால்காரர் சாலையில் விழுந்து கிடப்பது வைரலான வீடியோவில் காணப்பட்டது.

கம்போங்  செம்புலானைச் சேர்ந்த பெண் வாகனத்தை திருடிச் சென்றாரா என்பது குறித்து தாங்கள் இன்னும் விசாரணை நடத்தி வருவதாகவும்  ஜார்ஜ் கூறினார். திங்கட்கிழமை (பிப்ரவரி 14), இங்குள்ள நகர மையத்திலிருந்து 15 கி.மீட்டர் துரத்தலுக்குப் பிறகு, ஜாலான் செபாங்கரில் அந்தப் பெண்ணின் காரை தாண்டி சென்று ஓட்டுநர் பக்க  ஜன்னலை உடைத்து போலீசார் கைது செய்தனர்.

வாகனத்தை  நிறுத்தும் முயற்சியில் போலீசார் முன்னதாக வாகனத்தின் டயர்களை நோக்கி பல முறை சுட்டனர். இச்சம்பவத்தின்போது சிறிய காயங்களுக்கு ஒரு போலீஸ் சார்ஜென்ட் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்.

அப்பெண் தனது பாதையில் இருந்து வாகனத்தை பின்னோக்கிச் செலுத்தி தப்பிச் செல்ல முற்பட்ட போது போலீஸ்காரர் கீழே விழுந்தார். கொலை முயற்சி, வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனம் சனிக்கிழமை (பிப் 12) திருடப்பட்டதாக உரிமையாளரால் புகார் செய்யப்பட்டது.

Previous articleபண்டார் சிகாமாட்டில் ரயிலில் அடிபட்டு ஒருவர் மரணம்!
Next articleபுலனாய்வு பத்திரிகையாளரா லலிதா குணரத்னம்? கேள்வி எழுப்புகிறார் அசாம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version