Home மலேசியா 179 வீடுகள் எரிந்து சாம்பல் – 1,600 பேர் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர்

179 வீடுகள் எரிந்து சாம்பல் – 1,600 பேர் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர்

கோத்த கினபாலு  குடாத் கம்போங் லண்டாங் அயாங்கில் புதன்கிழமை (பிப். 16) மாலை ஏற்பட்ட தீயில் 179  வீடுகள் எரிந்து சாம்பலானது. இதனால்  1,600 க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்கள் ஆனார்கள். சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, குடாத் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 48 தீயணைப்பு  வீரர்கள், தன்னார்வ தீயணைப்புப் படையின் (பிபிஎஸ்) உதவியுடன் மாலை 4.26 மணிக்கு பேரிடர் அழைப்பைப் பெற்ற பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 ​தீ அதன் உச்சத்தில் இருந்ததால் இரவு 8.19 மணிக்கு தீயை கட்டுபடுத்த முடந்தாகவும் தீயணைப்பு வீரர்கள் காலை 6.43 மணிக்கு தீயை முற்றாக அணைத்ததாகவும் இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் நடவடிக்கையில் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM), மலேசிய தன்னார்வப் படைத் துறை (Rela) மற்றும் Sabah Electricity Sdn Bhd (SESB) உறுப்பினர்களும் இருந்தனர்.

இதற்கிடையில், சபா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் ஒரு அறிக்கையில், குடாத், டேவான் துன் முஸ்தபாவில் உள்ள நிவாரண மையத்தில்  பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்கள் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version