Home மலேசியா படகு மூழ்கியதில், 2 மணி நேரமாக கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

படகு மூழ்கியதில், 2 மணி நேரமாக கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

மெர்சிங், பிப்ரவரி 20 :

ரொம்பின் கடற்பகுதியில் உள்ள பூலாவ் ஸ்ரீ புவாட் மற்றும் பூலாவ் தாசு அருகே, நேற்று இரவு கடலில் படகு மூழ்கியதில், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, 8 மீனவர்கள்பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத்துறையின் (APMM) ஜோகூர் இயக்குநர், முதல் கடல்சார் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா இதுபற்றிக் கூறுகையில், 27 முதல் 56 வயதுடைய 8 மீனவர்களை ஏற்றிச் சென்ற படகில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, தண்ணீர் படகினுள் நுழைந்ததால், படகு கடலில் மூழ்கியது.

இச்சம்பவம் தொடர்பில், இரவு 9.35 மணிக்கு ஜோகூர் பாரு கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு (MRSC) MERS 999 லைன் மூலம், பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அவசரத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து MMEA படகுகள், கடல் காவல் படை (PPM) மற்றும் உள்ளூர் மீனவ சமூகத்தை உள்ளடக்கிய நடவடிக்கை இரவு 9.50 மணிக்கு செயல்படுத்தப்பட்டது.

“இரவு 11.20 மணியளவில், பாதிக்கப்பட்ட 8 உள்ளூர் மீனவர்கள் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்த நிலையில், படகில் சம்பவ பகுதி வழியாக சென்ற ஒரு ஃபைபர் படகு மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் இரவு 11.50 மணியளவில் பென்யாபோங் படகுத்துறைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர் என்றார்.

தேடுதல் நடவடிக்கையில் உதவிய ஏஜென்சிகளுக்கும் உள்ளூர் மீனவ சமூகத்திற்கும் MRSC அவர் நன்றி தெரிவித்தார்.

Previous articlePRN Johor: Kira-kira 3,000 anggota polis bertugas pada hari penamaan calon
Next articleஜோகூர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளில் சுமார் 3,000 போலீசார் பணியில் ஈடுபடுவர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version