Home COVID-19 உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. இதுவரை 424,793,352 பேர் பாதிப்பு.. 59,05,835 பேர் பலி

உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. இதுவரை 424,793,352 பேர் பாதிப்பு.. 59,05,835 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன.

2 வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்டது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 424,793,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,494 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா

இந்த கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.

அமெரிக்காவில் 80,087,617 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,056 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 959,412 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 282 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 51,673,955 பேர் குணமடைந்துள்ளனர்.

2வது இடம்

அதேபோல இந்தியாவை பொறுத்தவரை 42,837,960 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 15,487 பேர் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 512,141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 42,113,782 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

பாதுகாப்பு

வைரஸின் தாக்கத்தையும், பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

பிரேசில்

அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்ததாக, தொற்று அதிகம் பாதித்ததில் பிரேசில் நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது. 28,208,212 பேர் இதுவரை அங்கு தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். 40,625 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 644,362 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர். 424 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர். 25,058,072 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version