Home Top Story பிரதமர் – ஜோகூர் மந்திரி பெசாரின் கடமை உணர்வு செயல்பாடுகளில் வெளிப்படுகின்றன

பிரதமர் – ஜோகூர் மந்திரி பெசாரின் கடமை உணர்வு செயல்பாடுகளில் வெளிப்படுகின்றன

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் , ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் இருவரும் நாட்டின் மீதும் மக்கள் மீதும் பெருத்த அக்கறைக் கொண்டுள்ளனர் என்பது அவர்களின் செயல்பாடுகள் தெளிவாக புலப்படுத்துவதாக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் தெரிவித்தார்.

முன்னதாக தேசிய நிலப்பரப்பு கட்டமைப்பு தொடக்க நிகழ்ச்சி ஜோகூர் செத்தியா இண்டா எக்கோ ஃபுளோரா பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர்,வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சருடன் ஜோகூர் மாநில மந்திரி பெசார்,கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷஹிடான் காசிம்
உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரை ஆற்றிய வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர், நமது பிரதமர் தொடர்ந்து சளைக்காமல் மக்கள் பணியை ஆற்றிவருகிறார். அவர் அண்மையில தாய்லாந்து சென்று பிறகு கம்போடியா பயணமானார். நாடு திரும்பியதும் திரெங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காணச்சென்று ஆறுதல் கூறினார்.

தற்பொழுது ஜோகூர் மாநிலத்திற்கு வந்துள்ளார். இந்தச் செயல்பாடுகளானது அவரின் கடமை உணர்வைப் புலப்படுத்துகிறது என்றார் அமைச்சர் . தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தின் லேன்ட்ஸ்கேப் மிகவும் புகழ்பெற்ற ரீதியில் உள்ளதற்கு மாநில மந்திரி பெசாரின் (டத்தோ ஹஸ்னி முகமட்) நேர்மையான செயல்பாடுகளும் ஒரு காரணம் ஆகும். அதிலும் அவர் ஐஆர் (பொறியிலாளர்) என ரீசால் மெரிக்கான் நகைச்சுவையோடு சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version