Home மலேசியா ஜோகூர் மாநிலத் தேர்தலில் முன்கூட்டிய வாக்குப் பதிவு தொடங்கியது

ஜோகூர் மாநிலத் தேர்தலில் முன்கூட்டிய வாக்குப் பதிவு தொடங்கியது

ஜோகூர் மாநிலத் தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி முன்கூட்டிய வாக்குபதிவிற்காக அறுபத்து மூன்று வாக்குச்சாவடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

22,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் ஆயுதப் படைகள், காவல்துறை மற்றும் பொது நடவடிக்கைப் படை (GOF) மற்றும் அவர்களது மனைவிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Jalan Tebrau உள்ள ஜோகூர்  போலீஸ் தலைமையகத்தின் ஒரு பகுதி, மாநிலம் முழுவதும் உள்ள 10 மாவட்ட போலீஸ் தலைமையகம் மற்றும் சில அரசு அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

குளுவாங்கில் உள்ள மக்கோத்தா முகாம், உலு திராமில் உள்ள தெப்ராவ் முகாம், பத்து பகாட்டில் உள்ள 10வது ராயல் மலாய் ரெஜிமென்ட் முகாம் மற்றும் செகாமட்டில் உள்ள 4வது ராயல் பீரங்கி படைப்பிரிவு முகாம் ஆகியவற்றில் ராணுவ வீரர்கள் வாக்களிப்பார்கள்.

GOF பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் 5ஆவது பட்டாலியன், சிம்பாங் ரெங்கம், குளுவாங்கில் உள்ள GOF முகாம் மற்றும் பக்ரி, மூவாரில் உள்ள 6ஆவது பட்டாலியன் ஆகியவற்றில் வாக்களிப்பார்கள்.

தேர்தலில் 56 இடங்களுக்கு மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மார்ச் 12ஆம் தேதி வாக்குப்பதிவிற்கான  நாளாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version