Home மலேசியா ஆள் பற்றாக்குறையால் தோட்டத்துறைக்கு கடந்தாண்டு RM20 பில்லியன் இழப்பு என்கிறார் மனிதவள அமைச்சர்

ஆள் பற்றாக்குறையால் தோட்டத்துறைக்கு கடந்தாண்டு RM20 பில்லியன் இழப்பு என்கிறார் மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர், மார்ச் 8 :

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் தோட்டத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையால் கடந்த ஆண்டு RM20 பில்லியன் வரை இழப்பை சந்தித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் செம்பனைத் தோட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகும் என்றார்.

எனவே, அத்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இம்மாத இறுதியில் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் அழைத்து வருவதற்கான பதிவை அமைச்சு திறந்து வைப்பது மற்றும் ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்து அதனை செயல்படுத்த தேவையானவற்றை ஒழுங்கமைப்பது ஆகிய செயல்பாடுகளை அமைச்சு செய்து வருகிறது என்றார்.

“கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாங்கள் தேடியும் வாய்ப்பு கொடுத்தாலும் உள்ளூர்காரர் (குடிமக்கள்) ஆர்வம் காட்டவில்லை,” என்று இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி-பதில் போது டத்தோஸ்ரீ ஹாஜி சலீம் ஷெரீப்பின் (BN-ஜெம்போல்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

விரைவான தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பயிற்சி மற்றும் தொழிலாளர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளது என்றார்.

“2022 க்கான பட்ஜெட்டில், இந்த ஆண்டு 600,000 வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உள்நாட்டிலுள்ள வேலையின்மை விகிதத்தை குறைக்கும் இலக்கிற்கு வலுச்சேற்க்கும் வகையில்,‘Keluarga Malaysia, Makmur Sejahtera’ என்ற கருப்பொருளான மலேசிய குடும்ப வேலை உறுதித் திட்டத்திற்கு RM4.8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று எஸ். கேசவன் (PH-சுங்கை சிப்புட்)கேட்ட கேள்விக்கு சரவணன் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version