Home மலேசியா மலேசியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் சிவபாலன் திடீரென்று மயங்கி விழுந்து காலமானார்

மலேசியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் சிவபாலன் திடீரென்று மயங்கி விழுந்து காலமானார்

மலேசியாவின் முன்னாள்  அனைத்துலக ஹாக்கி வீரர் எஸ் சிவபாலன் தனது 59வது வயதில் இன்று காலமானார். அவரது முன்னாள் அணி வீரர் மிர்னவன் நவாவியின் கூற்றுப்படி, ஈப்போவில் நடைபெற்ற முன்னாள் வீரர்களுக்கான ஹாக்கி போட்டியின் போது மாலை 4 மணியளவில் சிவபாலன் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்டு தாம் மனமுடைந்து போனதாக  எப்ஃஎம்டியிடம் இடம் கூறினார். குறிப்பாக மாநில அளவில் விளையாட்டின் வளர்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சிவபாலனின் மரணம் ஹாக்கிக்கு பெரும் இழப்பாகும் என்றார்.

1990-ல் பெய்ஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடினேன். 1991/1992ல் மலேசிய ஹாக்கி லீக்  Malaysian Hockey League (MHL) அணியில் வென்ற எனது Kilat Club அணி வீரர். MHL வரலாற்றில்  கிளப் வென்ற முதல்  வெற்றி கோப்பை  என்று அவர் கூறினார்.

மிர்னாவன் தனது முன்னாள் அணி வீரரை “சோம்பேறித்தனம் இல்லாத, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பாளி” என்று விவரித்தார். அவரின் மரணம் உண்மையில் ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னாள் மலேசிய ஹாக்கி வீரர் மனிந்தர்ஜித் சிங் தனது நல்ல நண்பரின் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்றார். 1980கள் மற்றும் 1990 களில் சிவபாலன்  தனது அடையாளத்தை ஹாக்கி துறையில் பதித்ததாக என்று அவர் ம் கூறினார்.

அவர் ஒரு சிறந்த நண்பர் மற்றும் ஹாக்கி சகோதரத்துவத்திற்குள் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள வீரராக இருந்தார். அவருடைய சாதனை அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும், என்று அவர் கூறினார். சிவபாலன் தொழில் ரீதியாக விளையாடி ஓய்வு பெற்ற பிறகு, சமூகக் கழகங்களுக்கு ஹாக்கி பயிற்சி அளித்து வந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version