Home Hot News பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை, விற்பனை செய்ததாக 9 அரசு ஊழியர்கள் உட்பட 10 பேர் கைது...

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை, விற்பனை செய்ததாக 9 அரசு ஊழியர்கள் உட்பட 10 பேர் கைது – புக்கிட் அமான் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 15 :

பறிமுதல் செய்யப்பட்ட RM193,590 மதிப்புள்ள சியாபு வகை போதைப்பொருளை, கடத்த முயன்றது மற்றும் இந்தோனேசிய சந்தையில் மீண்டும் விற்பனை செய்தது தொடர்பில், 9 அரசு ஊழியர்கள் உட்பட 10 பேரை புக்கிட் அமான் கைது செய்துள்ளது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை இதுபற்றிக் கூறுகையில், ஒன்பது அரசு ஊழியர்கள் புத்ராஜெயாவில் வைத்து கைது செய்யப்பட்டனர், மற்றைய மீனவர் ஜோகூரில் கைது செய்யப்பட்டார் என்றார்.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் 33 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சந்தேகநபர்கள் 50 கிலோகிராம் சியாபு வகை போதைப்பொருளை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அது மலாக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் இந்தோனேசியாவின் டுமாயில் உள்ள சந்தைகளுக்கு விற்பதற்காக, சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஒரு போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கு மருந்தை விற்றதாக நம்பப்படுகிறது” என்று, அவர் இன்று புக்கிட் அமானில் நடந்த ஒரு சிறப்பு ஊடக மாநாட்டில் கூறினார்.

நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் வலையமைப்பைக் கொண்ட இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், நாட்டில் உள்ள மற்றைய போதைப்பொருள் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது என்றார்.

சந்தேகநபர்களிடமிருந்து 5,377.52 கிராம் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனையில், நான்கு அரசு ஊழியர்களுக்கு மெத்தம்பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு Honda CRV, ஒரு Toyota Vios மற்றும் Perodua Aruz ஆகியவற்றை உள்ளடக்கிய 4 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன் , RM5,325.78 என்ற தொகையுடைய ஒரு வங்கிக் கணக்கை முடக்கியதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மார்ச் 20 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை அறிந்த பொதுமக்கள் 012-2087222 என்ற எண்ணில் JSJN ஐ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version