Home உலகம் ரஷ்ய அதிபர் புதின் போர் குற்றவாளியாக அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின் போர் குற்றவாளியாக அறிவிப்பு!

வாஷிங்டன், மார்ச் 16 :

ஒருமனதாக ரஷ்ய அதிபர் புதினை (Vladimir Putin) போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா, 20 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பலமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, உக்ரைனில் பல முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

எனினும் அதனை எல்லாம் பொருட்படுத்தாத புதின், போரை நிறுத்தாது தொடர்ந்து வருகின்றார். இந்த நிலையில் அமெரிக்க செனட் சபை இந்த முடிவை அறிவித்துள்ளது.

நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை ஒரு போர் குற்றவாளி என்று கண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை ஒருமனதாக நிறைவேற்றியது.

உக்ரைனில் ராஷ்யாவின் தாக்குதலானது நாளுக்கு நாள் போர் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version