Home மலேசியா திரெங்கானு மாநில மக்களுக்கான நோன்புப்பெருநாள் சிறப்பு உதவிக்காக M65.9 மில்லியன் ஒதுக்கீடு

திரெங்கானு மாநில மக்களுக்கான நோன்புப்பெருநாள் சிறப்பு உதவிக்காக M65.9 மில்லியன் ஒதுக்கீடு

கோல திரெங்கானு, ஏப்ரல் 15 :

திரெங்கானு மாநில மக்களுக்கான நோன்புப்பெருநாள் சிறப்பு உதவிகளை வழங்குவதற்காக (bantuan khas Aidilfitri) RM65.9 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பெசார், டத்தோஸ்ரீ டாக்டர்அஹமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

அதில் A மற்றும் B வகை வகுப்பினை சேர்ந்த 150,947 பெறுநர்களுக்கான மொத்தம் RM58.99 மில்லியன் i-Fitri உதவியும் இதில் அடங்கும் என்று கூறினார்.

எஞ்சியவர்கள் 56 மற்றும் அதற்கும் கீழான தரங்களை உள்ளடக்கிய மொத்தம் 13,827 மாநில அரசு ஊழியர்களாவர் என்று அவர் கூறினார்.

“தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 25 முதல் நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி தொகை RM500 கிடைக்கும்.

“இந்த உதவி அவர்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்தை மேலும் உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version