Home மலேசியா கோலாலம்பூரிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் எஸ்.ஓ.பிக்கு இணங்காத 76 பேருக்கு அபராதம்!

கோலாலம்பூரிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் எஸ்.ஓ.பிக்கு இணங்காத 76 பேருக்கு அபராதம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 17 :

இங்குள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனையில், நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்கத் தவறியதால் மொத்தம் 76 பார்வையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறையின் தலைமை துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா இதுபற்றிக் கூறுகையில், அதிகாலை 1.15 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் தேசிய மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட எஸ்ஓபிகளுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது என்றார்.

20 முதல் 51 வயதுக்குட்பட்ட 50 ஆண்களும் 26 பெண்களும் அடங்கிய 76 உள்ளூர்வாசிகள் பொழுதுபோக்கு வளாகத்திற்குள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

“அவர்கள் வளாகத்தில் இருக்கும்போது உடல் ரீதியிலான இடைவெளியை பின்பற்றவில்லை என்பதனால் ஒவ்வொருவருக்கும் தலா RM1,000 அபராதம் விதிக்கப்பட்டது ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோயின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள் -எண்டமிக் கட்டத்திற்கு மாறுதல்) விதிமுறைகள் 2022 இன் விதிமுறை 18 (1) இன் படி இந்த அபராதம் வழங்கப்பட்டது.

“ஆய்வின் விளைவாக, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த குற்றத்திற்காக, 1992 ஆம் ஆண்டின் பொழுதுபோக்கு (கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேசம்) சட்டத்தின் பிரிவு 4 (1) இன் கீழ் விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version