Home மலேசியா கோலாலம்பூரில் மூடும் உத்தரவை மீறிச் செயல்பட்ட இரு பொழுதுபோக்கு மையங்கள் மீண்டும் மூட உத்தரவு

கோலாலம்பூரில் மூடும் உத்தரவை மீறிச் செயல்பட்ட இரு பொழுதுபோக்கு மையங்கள் மீண்டும் மூட உத்தரவு

கோலாலம்பூர், ஏப்ரல் 18 :

தலைநகரில் உள்ள ஜாலான் தெலாவியைச் சுற்றியுள்ள இரண்டு பொழுதுபோக்கு வளாகங்கள் உரிம நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால், அவற்றை மீண்டும் மூடுமாறு கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) உத்தரவிட்டுள்ளது.

இன்று அது வெளியிட்ட ஒரு அறிக்கையில், டிபிகேஎல் பிரிவு 17, பொழுதுபோக்குச் சட்டம் 1992 இன் கீழ் ஏப்ரல் 10, 15ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கை மூலம் அம்மையங்கள் நிபந்தனைகளை மீறியது கண்டறியப்பட்டது.

மேலும், மூடும் உத்தரவை மீறியதற்காக இரண்டு வளாகங்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

“அனுமதியின்றி பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நடத்துவதற்கு, பொழுதுபோக்குச் சட்டம் 1992, பிரிவு 17இன் கீழ் அவ்வளாகம் உடனடியாக மூடப்படும். மேலும் அதே சட்டத்தின் பிரிவு 4 (1) (a) மற்றும் 4 (1) (b) ஆகியவற்றின் கீழ் ஒரு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் அவ்வளாகங்களில் பயன்படுத்தப்பட்ட “ஸ்பீக்கர்கள், ஒலி அல்லது ஆடியோ கலவை மற்றும் டிஸ்க் ஜாக்கி கன்சோல் கட்டுப்பாட்டு சாதனம் சம்பந்தப்பட்ட வளாகத்தில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடர்பான மூன்று உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் கூறினார்.

அறிக்கையின்படி, கைப்பற்றப்பட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து உபகரணங்களும் பதிவு மற்றும் தற்காலிக சேமிப்பு நோக்கங்களுக்காக செராஸ், ஜாலான் லோம்போங் தாமான் மிஹார்ஜாவில் உள்ள DBKL அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

மேலும் இதுபோன்ற கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடரும் என்றும் அது தெரிவித்தது.

கோலாலம்பூர் பொது புகார் அமைப்பு (ADU@KL) மூலம் https://adukl.dbkl.gov.my என்ற விரைவு இணைப்பில் DBKL க்கு இந்தச் செயல்பாடு குறித்த ஒத்துழைப்பையோ அல்லது ஏதேனும் தகவலையோ வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version