Home மலேசியா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

பட்டர்வொர்த், ஏப்ரல் 18 :

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 116.3 ஆவது கிலோமிட்டரில் இன்று (ஏப்ரல் 18) மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் 22 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று வடக்கு செபெராங் பிறை காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ரட்ஸி அஹமட் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “சுங்கைப் பட்டாணியில் இருந்து சுங்கை துவா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவசரப் பாதையில் சென்றுகொண்டிருந்த காரின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

மோதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் வலது பக்கத்தில் விழுந்தார், மேலும் நான்கு சக்கர வாகனம் (4WD) அவர் மீது மோதியதை அவரால் தவிர்க்க முடியவில்லை என்று முகமட் ரட்ஸி கூறினார்.

மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர் என்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version