Home மலேசியா நெகிரி செம்பிலானில் 3 மாதங்களில் புகைபிடித்தல் தொடர்பான 593 குற்றங்களுக்கு அபராதம் விதிப்பு

நெகிரி செம்பிலானில் 3 மாதங்களில் புகைபிடித்தல் தொடர்பான 593 குற்றங்களுக்கு அபராதம் விதிப்பு

சிரம்பான், ஏப்ரல் 20 :

நெகிரி செம்பிலான் மாநிலத்தில், ஜனவரி 1 முதல் ஏப்ரல் 2 வரையான 3 மாதங்களில் புகைபிடித்தல் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் RM163,600 மதிப்புள்ள 593 அபராதம் விதிக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் வாணிபக் குழுத் தலைவர் எஸ்.வீரப்பன் கூறியதாவது: புகையிலைப் பொருள் கட்டுப்பாடு விதிமுறைகள் 2004ன் கீழ் மாநிலம் முழுவதும் 2,515 வளாகங்களில் நடந்த 131 ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டன என்றார்.

“மாநில சுகாதாரத் துறையானது உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் புகைத்தல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஏற்படும் புகைப்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்பான ஒவ்வொரு புகாரையும் எப்போதும் உணர்ந்து, தினசரி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு புகாரும் விசாரிக்கப்பட்டு, உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று இன்று நடந்த 14வது மாநில சட்டசபையின் ஐந்தாவது அமர்வின் முதல் கூட்டத்தில் அவர் கூறினார்.

பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடுக்கும் மாநில அரசின் நடவடிக்கையைப் பற்றி அறிய விரும்பிய யாப் இயூ வெங்கின் (PH-Mambau) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version