Home மலேசியா போதைப்பொருள் பயன்படுத்தியதாக பேராக் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பேராக் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 :

இன்று புக்கிட் மெர்தாஜாமில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போதைப்பொருள் பாவனை செய்ததாக பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு மீது குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நூருல் ரசிதா முகமட் அகித் முன்நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 53 வயதான அவர் அதனை மறுத்து விசாரணையை கோரினார்.

ஜனவரி 14, 2022 அன்று நள்ளிரவு 12.13 மணியளவில், செபெராங் பிறை செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வு அலுவலகத்தில் டெரன்ஸ் தனக்குள் மெத்திலினெடியோக்சிமெதம்பேட்டமைன் போதைப்பொருளை செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 15(1)(a) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் RM5,000 அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படலாம்.

ஜனவரி 13 அன்று, டெரன்ஸ் போதைப்பொருள் சோதனையில் நேர்மராசியான பதிலை பெற்ற பின்னர் பட்டர்வொர்த்தில் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version