Home உலகம் மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 55-வது நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி வந்தன.

மரியபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷ்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு ராணுவத்தினருக்கு புதின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version