Home மலேசியா காருக்குள் பெண் இறந்து கிடந்த சம்பவத்தில் எந்த குற்றச்செயலும் கண்டறியப்படவில்லை

காருக்குள் பெண் இறந்து கிடந்த சம்பவத்தில் எந்த குற்றச்செயலும் கண்டறியப்படவில்லை

மலாக்காவில் 45 வயது பெண்ணின் சடலத்திற்கு அருகில் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் எந்தவித தவறான விஷயஙகள் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (ஏப்ரல் 23) மதியம் 1.30 மணியளவில் அலோர் காஜாவில் உள்ள ஜாலான் மெங்கோங் ஹுடான் பெர்ச்சாவில் ஒரு காரில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அலோர் காஜா OCPD துணைத் தலைவர் அர்ஷத் அபு தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) அவர், “அவளுடைய வலது கையில் நான்கு வெட்டுக் காயங்களைக் கண்டோம்.

மாச்சாப் பாருவைச் சேர்ந்த பெண் ஒரு  கிராணியாக பணிபுரிந்ததாகவும், சமீபத்தில் கடுமையான நோய் கண்டறியப்பட்டதாகவும் அர்ஷத் கூறினார். அந்த பெண்ணின் சகோதரி விசாரணை அதிகாரிகளிடம், இறந்தவர் நோயைப் பற்றி அறிந்ததிலிருந்து உணர்ச்சிவசப்பட்டு இருந்ததாக  கூறினார்.

சூப்ட் அர்ஷத் கூறுகையில், அந்த வழியாக சென்ற ஒருவரால் அந்த பெண் தனது காருக்குள் இறந்து கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். நாங்கள் தற்காலிகமாக திடீர் மரண அறிக்கையின் கீழ் வழக்கை வகைப்படுத்தியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version