Home மலேசியா கோலாலம்பூரில் பணியிலிருக்கும் போலீஸ்காரர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே ஹரி ராயா விடுமுறை என்கிறார் கோலாலம்பூர் காவல்துறைத்...

கோலாலம்பூரில் பணியிலிருக்கும் போலீஸ்காரர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே ஹரி ராயா விடுமுறை என்கிறார் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்

கோலாலம்பூர், ஏப்ரல் 29 :

கோலாலம்பூரில் பணியிலிருக்கும் போலீஸ்காரர்களில், அதாவது 9,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஹரி ராயா ஐதடில்பித்ரியைக் கொண்டாட விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்துள்ளார்.

கொண்டாட்ட காலங்களிலும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் அமலாக்கப் பணிகள் மற்றும் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்புப் பணிகள் உள்ளிட்டவை வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்றார்.

“கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிற்கான மொத்த காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 9,000 க்கும் அதிகமாக உள்ளது. அத்தோடு கோலாலம்பூரில் மட்டும் சுமார் 670 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

“ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்காக, 10 சதவீதம் பேர் மட்டுமே விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வழக்கம் போல் செயல்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூர் போக்குவரத்து நிலையத்தில் நடைபெற்ற ஓப் செலாமாட் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிராமத்திற்குத் திரும்புவதற்கு முன்னரும், திரும்பும் போதும் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சொத்துக்களை எப்போதும் கவனித்துக் கொள்ளுமாறு சமூகத்தினருக்கு நினைவூட்டப்பட்டது என்றார்.

Previous articleமூன்று வயது குழந்தையை வளர்ப்பதில் அலட்சியப்படுத்திய, துன்புறுத்திய தம்பதியருக்கு 4 மாதங்கள் சிறை
Next articleDirempuh kereta, nenek terpelanting masuk longkang

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version