Home மலேசியா ஹரிராயா அய்டில்ஃபிட்ரி கொண்டாட்டத்திற்காக 15,000 வாகனங்கள் கங்காருக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹரிராயா அய்டில்ஃபிட்ரி கொண்டாட்டத்திற்காக 15,000 வாகனங்கள் கங்காருக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கங்கார், மே 1 :

அய்டில்ஃபிட்ரி கொண்டாட்டத்துடன் சேர்த்து மொத்தம் 15,000 வாகனங்கள் கங்காருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் யுஷரிபுடின் முகமட் யூசோப் தெரிவித்தார்.

நேற்று இரவு, இங்கு சாலைத் தடுப்பை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கங்காரில் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய, எட்டு குழுக்களை அமைத்து ஏப்ரல் 29 முதல் மே 8 வரை ‘Op Selamat 18’ உடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையை நடத்தியுள்ளோம்.

ஜூப்லி இமாஸ் ரவுண்டானா, ஜாலான் ராஜா சையத் அல்வி, ஜாலான் கம்போங் பாகாவ், ஜாலான் பென்ஜாரா, ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள பகுதிகள், கோலா பெர்லிஸ் ஜெட்டி மற்றும் கோலா பெர்லிஸ் கடற்கரை சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று யுஷாரிபுடின் கூறினார்.

பண்டிகைக் காலங்களில் வீடுகள் உடைகத்து திருடுதல் போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ‘Op Khas Aidilfitri’ என்ற திட்டத்தையும் காவல்துறை தொடங்கியுள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version