Home மலேசியா சுங்கை செமந்தானில் உள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்தவரின் உடல் 3 நாட்களின் பின் கண்டுபிடிப்பு

சுங்கை செமந்தானில் உள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்தவரின் உடல் 3 நாட்களின் பின் கண்டுபிடிப்பு

தெமெர்லோ, மே 10 :

சுங்கை செமந்தானில் உள்ள பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து, மூழ்கியதாக நம்பப்படும் ஒருவர் மூன்று நாட்களின் பின்னர், இன்று கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முகமட் ஹனிசாம் முகமட் காலிப், 32, என்பவரே இறந்ததாகவும், அவர் மே 8 அன்று ஆற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மாநில மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா கூறுகையில், பாலத்தில் தவறி விழுந்ததாக கூறப்பட்ட நாளிலிருந்து (மே 8) தொடங்கப்பட்ட தேடுதல் நடவிக்கையின் மூன்றாம் நாள் காலை 9.01 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

“பாதிக்கப்பட்டவரின் சடலம் அவர் விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மீன் கூண்டுக்கு அருகில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.

“இதற்கிடையில், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவரின் உடலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர், பின்னர் சடலம் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தேடுதல் நடவடிக்கையானது தெமெர்லோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் BBDP Bukit Angin Water Rescue Team (PPDA) மற்றும் K9 குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காலை 9.33 மணிக்கு முடிவுக்கு வந்தது என்றார்.

Previous articleவாடிக்கையாளரைக் குத்தியதற்காக நாசி காண்டார் உணவக ஊழியருக்கு 1,500 வெள்ளி அபராதம்
Next articleRM2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வரியில்லா சிகரெட்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version