Home மலேசியா தெனோம், பியூஃபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,958 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

தெனோம், பியூஃபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,958 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

Flood victims in Pitas evacuated.

கோத்தா கினாபாலு, மே 12 :

தெனோம் மற்றும் பியூஃபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 733 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,958 பேர் 17 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில், பியூஃபோர்ட்டில் இரண்டு வெள்ள நிவாரண மையங்கள் செயல்படுவதாகத் தெரிவித்தது, அதாவது 218 பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட செலாகான் மண்டபம் மற்றும் பனிர் DUN DSP மண்டபத்தில் 132 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

“தெனோமில் மொத்தம் 15 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன, அவற்றில் மொத்தம் 1608 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இதுவரை தெனோமில் 22 கிராமங்களும், பியூஃபோர்ட்டில் 56 கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version