Home மலேசியா பொது இடங்களில் புகைப்பிடித்தவர்கள் ஐவருக்கு பெர்லிஸ் சுகாதாரத் துறை அபராதம்

பொது இடங்களில் புகைப்பிடித்தவர்கள் ஐவருக்கு பெர்லிஸ் சுகாதாரத் துறை அபராதம்

கங்கார், மே 14 :

பெர்லிஸ் சுகாதாரத் துறை மேற்கொண்ட ‘Ops Lebaran Bebas Asap Rokok’ நடவடிக்கையில், நேற்றிரவு பெர்சியாரான் மக்கனான் பிந்தோங் அருகில் உள்ள பொது இடத்தில் புகைப்பிடித்த தனிநபர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக அபராதம் விதித்தது.

பெர்லிஸ் சுகாதாரத் துறை துணை இயக்குநர் (பொது சுகாதாரப் பிரிவு), டாக்டர் கசாலி சிக் கூறுகையில், புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிமுறைகள் (PPKHT) 2004 இன் விதிமுறைகள் 11 (1) மற்றும் 22 (2) இன் 32b இன் கீழ் மொத்தம் RM1,750 ஐ உள்ளடக்கிய அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

“நாங்கள் 33 வளாகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம், பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு எதிராக ஐந்து அபராதங்களையும், புகைபிடிக்க தடை என்ற பலகைகளை வைக்கத் தவறியதற்காக வளாகத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக இரண்டு அபராதங்களையும் வழங்கினோம்,” என்று அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆய்வுகள் மட்டுமின்றி, பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள், ஆலோசனைகள் மற்றும் குற்றத்தின் வகை மற்றும் அவற்ருக்கு எதிரான அபராதங்கள் தொடர்பான அட்டைகளை விநியோகித்தல் போன்றவற்றையும் அவரது குழுவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

“புகைபிடித்தல் தடைசெய்யப்பட்ட மண்டலங்களில் குறிப்பாக உணவகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் பகுதிகளில் புகைபிடிக்கக்கூடாது என்று சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version