Home உலகம் 132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு...

132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி

பீஜிங், மே 18:

கடந்த மாா்ச் மாதம் 21 ஆம் தேதி, சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில், போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானது. சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள் , 2 விமானிகள்,7 விமான ஊழியா்கள் என மொத்தம் 132 போ் என அதில் பயணம் செய்த அனைவரும் அந்த விமான விபத்தில் உயிரிழந்தனர்.

சீனாவில் கடந்த 28 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து இது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டி சேகரித்த தகவவல்களை அமெரிக்க புலனாய்வு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

அதன்படி விமானி அறையில் இருந்த யாரோ தான் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்து உள்ளனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாாிகள் மற்றும் அருகில் பறந்து கொண்டு இருந்த விமானங்களின் விமானிகள் பலமுறை அழைப்பு விடுத்தும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் பதிலளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து, புலானாய்வு பணிகளில் சீனாவிற்கு உதவும் வகையில் அமொிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினரும், போயிங் நிறுவனத்தை சோ்ந்தவா்களும் சீனாவிற்கு சென்றுள்ளனா். இவா்கள் செய்த ஆய்வில் விமானத்தில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இருப்பதாக கண்டறியவில்லை என தொிவித்துள்ளனா்.

விபத்து பற்றிய ஆய்வு பணிகளுக்கு தாங்கள் பொறுப்பில்லை என ஏர்லைன் சார்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. சேதமடைந்த கருப்புப் பெட்டியை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடந்து வருவதாக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version