Home மலேசியா முதலை தாக்கியதாக நம்பப்படும் ஆடவரின் தலை ஆற்றில் இருந்து கண்டெடுப்பு

முதலை தாக்கியதாக நம்பப்படும் ஆடவரின் தலை ஆற்றில் இருந்து கண்டெடுப்பு

முதலை தாக்கியதில் பலியானவரின் தலை, சுங்கை (ஆறு) அஹோங் கம்போங் கங்கா, லுண்டுவில் மிதக்க காணப்பட்டது. நேற்று மாலை 5 மணியளவில் அவரது குடும்ப உறுப்பினர்களால் தலை கண்டுபிடிக்கப்பட்டதாக லுண்டு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் Damataries Lautin கூறினார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட Sebarang Bingkok 56, நேற்று மதியம் 3 மணி முதல் காணவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு  நீரோட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் தலையை மட்டும் அவரது குடும்பத்தினர் கண்டபோது, ​​​​ஆடவர் காணாமல் போனதன் மர்மத்திற்கு விடை கிடைத்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தலை மேலதிக விசாரணைக்காக லுண்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டமடரிஸ் கூறினார். அவர் கூறுகையில், முதலை தாக்குதலுக்கு உள்ளானதாக கருதப்படும் ஆடவரின் உடலின் பாகத்தை கண்டறியும் நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது.

 மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (APM), மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) மற்றும் சரவாக் வனவியல் கழகம் (SFC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடந்தப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version