Home மலேசியா அரசாங்க மானியத்தை எதிர்த்து கோழி வளர்ப்பாளர்கள் ‘வார இறுதிப் புறக்கணிப்பு’

அரசாங்க மானியத்தை எதிர்த்து கோழி வளர்ப்பாளர்கள் ‘வார இறுதிப் புறக்கணிப்பு’

நான்கு கோழிப்பண்ணை நிறுவனங்கள் இந்த வார இறுதியில் “boycott” மூலம் செயல்பாடுகளை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழில்துறைக்கு RM26 மில்லியன் இழப்பு ஏற்படலாம். கோழிப்பண்ணையாளர்களுக்கு ஒரு கிலோகிராமிற்கு 60 சென் மானியம் வழங்குவதில் அரசாங்கம் தாமதம் செய்ததால் “boycott” என்று ஒரு தொழில்துறை வட்டாரம் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தது.

இதுவரை, நான்கு நிறுவனங்கள் இது தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. சிலர் இன்று தங்கள் செயல்பாடுகளை நிறுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் இன்று தொடங்கி திங்கட்கிழமை முடிவடையும், என்று அறிக்கை கூறுகிறது.  இது கோழி விநியோக சங்கிலியை சீர்குலைக்கும், சந்தை RM26 மில்லியன் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மலாக்காவில் உள்ள சில கோழி வளர்ப்பாளர்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக கால்நடை பண்ணையாளர்கள் சங்க கூட்டமைப்பு மறுத்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. மெர்லிமாவ், ஜாசினில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணை, தங்கள் பண்ணையில் உள்ள உயிருள்ள கோழிகள் சரியான விகிதத்தில் எடை அதிகரிக்கவில்லை என்ற அடிப்படையில் மே 21-22 அன்று கோழி விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில் கோழியின் சப்ளை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் செலாயாங் மொத்த சந்தையில் கோழி சப்ளை செய்யப்படாது என்ற குற்றச்சாட்டை மறுத்தார். ஆனல்”பங்கு குறைவாக உள்ளது” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில கோழி வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான இட்ரஸ் ஜைனல் அபிடின், 70% உறுப்பினர்களின் இருப்பில்  இருந்த கோழிகள் நோயால் இறந்துவிட்டதாகவும், இதனால் சந்தையில் கோழிகளின் வரத்து குறைவாக இருப்பதாகவும் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

Previous articleதிரெங்கானுவில் 1,000 அம்னோ தலைவர்களுடன் நடந்த அய்டில்ஃபித்ரி கொண்டாட்டத்தில் பிரதமர்!
Next articleLRT இடையூறுகள் சீனாவின் நடமாட்டு கட்டுபாட்டினால் என்கிறது Rapid நிறுவனம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version