Home COVID-19 5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான இலவச கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான (PICKids) கடைசி வாய்ப்பு...

5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான இலவச கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான (PICKids) கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது

கோலாலம்பூர், மே 31:

நாட்டின் “5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICKids) கீழ், அவர்களுக்கான முதல் டோஸ் இன்றைக்குப் (மே 31) பிறகு இலவசமாக வழங்கப்படாது” என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இரண்டு குழுக்களுக்கு விதிவிலக்கு இருக்கும் – அதாவது மே 31 மற்றும் டிசம்பர் 31 க்கு இடையில் இன்னும் ஐந்து வயதை பூர்த்திசெய்யாதவர்கள் மற்றும் சமீபத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது சமீபத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரைக் கொண்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போடுவதை ஒத்திவைத்தவர்கள் தமது சந்திப்புக்காக MySejahtera வழியாக பதிவு செய்யலாம் அல்லது அவர்களின் இலவச தடுப்பூசிக்கு அருகிலுள்ள கிளினிக் கேசிஹாத்தானுக்குச் செல்லலாம் என்று அவர் தெரிவித்தார்.

அத்தோடு ” விலக்கு வழங்கப்பட்டுள்ள இரு குழுக்களுக்கும் (தங்கள்) முதல் டோஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜனவரி 31, 2023 ஆகும்,” என்று அவர் கூறினார்.

இதுவரை முதல் டோஸ் அல்லது கோவிட்-19 தடுப்பூசி போடப்படாத மற்றவர்கள் தனியார் சுகாதார நிலையங்களில் கட்டணம் செலுத்தி அதைச் செலுத்திக் கொள்ளலாம் என்று துணை சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இந்தாண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version