Home மலேசியா வழக்கறிஞர்கள் பாடாங் மெர்போக் பகுதியில் இருந்து முன்னேறி செல்வதை தடுக்க காவல்துறை மனித தடுப்புகளை அமைத்துள்ளது

வழக்கறிஞர்கள் பாடாங் மெர்போக் பகுதியில் இருந்து முன்னேறி செல்வதை தடுக்க காவல்துறை மனித தடுப்புகளை அமைத்துள்ளது

“நீதித்துறை சுதந்திரத்திற்கான நடை”க்காக பாடாங் மெர்போக்கில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வழக்கறிஞர்கள் அணிவகுப்பு நடத்த காவல்துறையினருடன் மலேசிய பார் கவுன்சில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக  தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 20 வழக்கறிஞர்களை மட்டுமே மகஜர் ஒன்றினை வழங்குவதற்காக நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பேரணியாக செல்ல காவல்துறை அனுமதித்தது. ஆனால் நாடாளுமன்றம் இதற்கு உடன்படவில்லை.

வழக்கறிஞர்கள் அணிவகுப்பை முன்னெடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் பாடாங் மெர்போக் கார் பார்க்கிங்கின் இரு முனைகளிலும் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை மனித அரண்களை உடைக்க முயன்றனர்.

சுமார் 500 வழக்கறிஞர்கள் அணிவகுப்புக்கு திரண்டிருந்தனர். ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்பினால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ டாமி தாமஸ் மற்றும் டிஏபி, பிகேஆர் மற்றும் மூடா போன்ற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version