Home Top Story ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 920-ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 920-ஆக உயர்வு

காபூல், ஜூன் 23 :

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில், 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 920ஆக உயர்ந்துள்ளது.

ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் இன்னமும் சிக்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த 1998-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,500 பேர் உயிரிழந்தனர். 2002-ம் ஆண்டு வடக்கு ஆப்கானிஸ் தானில் ஏற்பட்ட நில நடுக் கத்தில் 1000 பேரும், 2015-ம் ஆண்டு நாட்டின் வட கிழக்கில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 200-க்கும் மேற் பட்டோரும் பலியானார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

Previous articleGuan Eng senyum dapat wang RM100,000 dalam sampul – Saksi
Next articleநோயாளியின் உறவினர்களைத் தேடுகிறது கிள்ளான் மருத்துவமனை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version