Home மலேசியா  8 பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட 229 நபர்கள் கைது…!

 8 பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட 229 நபர்கள் கைது…!

கோலாலம்பூர், ஜூன் 27 :

தலைநகர் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள 8 பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக மொத்தம் 229 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 21 முதல் 23 வரை தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியுடன் (AADK) இணைந்து நடத்திய சிறப்பு Op Tapis நடவடிக்கையில், போதைபொருள் பயன்பாடு மற்றும் விநியோக மையமாக இருந்த பல பிபிஆர் அடுக்கு மாடிக்குடியிருப்பை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஆஸ்மி அபு காசிம் கூறுகையில், கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் (JSJN) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

அவர்கள் பிபிஆர் டேசா துன் ரசாக், பிபிஆர் பந்தாய் தாலாம், பிபிஆர் டேசா ரேஜாங், பிபிஆர் சுங்கை போனஸ், பிபிஆர் இன்டான் பைதுரி, பிளாட் ஸ்ரீ திரெங்கானு, சோவ் கிட் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றிலும் சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் மொத்தம் 11 பேர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி (ஆபத்தான மருந்துகள் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் 1985) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“அதுமட்டுமின்றி, 21 நபர்கள் மீண்டும் மீண்டும் போதைப்பொருள் உட்கொள்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டனர் (ஆபத்தான மருந்துகள் சட்டம் (ADB) 1952 பிரிவு 39c) மற்றும் 10 நபர்களுக்கு பல்வேறு குற்றங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“Ops Tapis Khas நடவடிக்கையை தொடர்ந்து, JSJN ஆனது Op Igor என்னும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள உள்ளூர் ஆட்களால் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் விநியோக கும்பலை தோற்கடிக்க முடிந்தது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

மேலும் நடவடிக்கையில், 24 முதல் 31 வயதுடைய மூன்று நபர்களை போலீசார் கைது செய்ததாகவும், அவர்களிடமிருந்து RM43,200 மதிப்புள்ள 17.3 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகவும் அஸ்மி கூறினார்.

வாகனங்கள் மற்றும் நகைகள் உட்பட அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படட சொத்துக்களின் மொத்த மதிப்பு RM162,750 ஆகும்.

“பிரிவு 39B ADB 1952 இன் படி விசாரணையில் உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் நேற்று தொடங்கி ஜூன் 28 வரை ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version