Home Top Story 48 வருடங்களுக்கு முன் உருவாக்கிய தன்னுடைய ‘ரெஸ்யூமை’ பகிர்ந்த பில் கேட்ஸ்

48 வருடங்களுக்கு முன் உருவாக்கிய தன்னுடைய ‘ரெஸ்யூமை’ பகிர்ந்த பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர் பில் கேட்ஸ். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று இருந்தார். தற்போது 66 வயதாகும் பில் கேட்ஸ் 1975 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றதால் இவர் பெரும் செல்வந்தரானார். இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது “லிங்க்டு இன் ” பக்கத்தில் 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூம்-ஐ பகிர்ந்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்த போது இந்த ரெஸ்யூம்-ஐ அவர் தயார் செய்திருக்கிறார். தன்னுடைய சுயவிவர குறிப்புகள் பற்றி பல தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இயங்குதளக் கட்டமைப்பு தகவல்தள நிர்வாகம், கணினி வரைகலை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டுள்ளதாகத் கேட்ஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ரெஸ்யூம் புகைப்படத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் சமீபத்தில் கல்லூரி பட்டம் பெற்று இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததை விட உங்கள் ரெஸ்யூம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரின் ரெஸ்யூம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version