Home Hot News திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் எட்டு வாகனங்கள் எரிந்து நாசம்

திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் எட்டு வாகனங்கள் எரிந்து நாசம்

சுங்கை பூலோ, ஜூலை 10 :

நேற்று ஜாலான் நோவா, U5/94A லாமான் பெர்மை அருகே ஏற்பட்ட காட்டுத் தீயில், அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வேலைத்தளத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த எட்டு வாகனங்கள் எரிந்து நாசமாயின.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இரவு 8.29 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.

“சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் ஷா ஆலாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து இரண்டு இயந்திரங்களுடன் மொத்தம் 15 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், காட்டுத் தீயில் எட்டு வாகனங்கள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படும் வரை உடனடியாக தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, இவ்விபத்தில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகளின் அளவு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

Previous articleஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டெட்சுயா யமகாமி யார்?
Next articleஇன்று ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் தம்பதியினர் வாழ்த்து

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version