Home Top Story ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை

ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை

1985 ஆம் ஆண்டில், ஏர் இந்தியா விமானம் 182 வெடிகுண்டு தாக்குதலில் 329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் அயர்லாந்து கடற்கரையில் நடைபெற்றது. அந்த வெடிகுண்டு தாக்குதலில் ரிபுதமன் சிங் மாலிக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார்.

ஆனால் வழக்கு விசாரணையின்போது, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், வான்கூவரில் தொழில் செய்துவந்த ரிபுதமன் சிங் மாலிக், நேற்று கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிபுதாமன் சிங் மாலிக் கனடாவில் கனடாவின் சரே நகரில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ரிபுதமான சிங் மாலிக் உள்பட 2 பேர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version