Home மலேசியா இவ்வாண்டு இறுதிக்குள் 1,000 பள்ளிகள் 5ஜி அதிவேக இணைய சேவையைப் பெறும் என்கிறார் அன்னுவார் மூசா

இவ்வாண்டு இறுதிக்குள் 1,000 பள்ளிகள் 5ஜி அதிவேக இணைய சேவையைப் பெறும் என்கிறார் அன்னுவார் மூசா

கோத்தா பாரு, ஜூலை 17 :

கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் டான்ஸ்ரீ அன்னுவார் மூசா கூறினார்.

இம்முயற்சி விரைவாக நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சின் ஒப்புதலுக்காக தமது அமைச்சு இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும், 5G அதிவேக இணைய சேவையின் திறனை சோதிப்பதற்கு முதற்கட்டமாக ஐந்து அல்லது ஆறு பள்ளிகளைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று, அவர் இன்று கெத்தேரே சந்தையில் பொருட்களின் விலைகளை சோதனைகளை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினரானஅன்னுவார் தொடர்ந்து கூறும்போது, பள்ளிகளுக்கு அமைக்கப்படும் 5G அதிவேக இணைய வசதியின் மூலம், சிறந்த கற்றல் செயல்முறையை பள்ளி நிர்வாகங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கும் பயனளிக்கும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version