Home மலேசியா 2022-2025 ஆண்டிற்கான பிகேஆர் தலைவராக அன்வார், துணைத் தலைவராக ரஃபிசி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்

2022-2025 ஆண்டிற்கான பிகேஆர் தலைவராக அன்வார், துணைத் தலைவராக ரஃபிசி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்

பிகேஆரின் 16ஆவது தேசிய மாநாட்டில், போட்டியின்றி வெற்றி பெற்ற டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2022-2025  ஆண்டிற்கான  பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் (பிகேஆர்) தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பிகேஆரின் புதிய கட்சித் தலைமை குறித்த அறிவிப்பை அதன் தேர்தல் குழுவின் (ஜேபிபி) துணைத் தலைவர் சைபுல் இசாம் ரம்லி வெளியிட்டார்.

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதின் இஸ்மாயிலை தோற்கடித்த பின்னர், முன்னாள் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர்  முகமட் ரபிசி ரம்லி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பிகேஆர் இணையதளத்தின்படி, ரஃபிசி 59,678 வாக்குகளைப் பெற்றதாகவும், சைபுதீன் நசுஷன் 43,010 வாக்குகளைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிகேஆர் துணைத் தலைவர்களின் நான்கு பதவிகளுக்கு, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 46,075 வாக்குகள் பெற்றார், தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற சாங் லிஹ் காங் (34,939 வாக்குகள்); தித்திவாங்சா  நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது (34,496 வாக்குகள்) மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் (33,230 வாக்குகள்). நான்கு பதவிகளுக்கு மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர்.  பிகேஆர் தேசிய காங்கிரஸில் 2,665 பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 புதிய மத்திய தலைமைத்துவ  குழு  உறுப்பினர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.

Previous articleபிரதமராக இருப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு உண்மையிலேயே உங்களுக்கு இருந்ததா? அன்வாரிடம் நஜிப் கேள்வி
Next articleமாணவரை நாற்காலி மீது தூக்கி வீசியதாக கூறப்படும் ஆசிரியர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version