Home Top Story கடும் நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது இலங்கை

கடும் நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது இலங்கை

இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது. இதனல், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

அத்துடன், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் நேற்று குறைத்தது. கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.

அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மே மாத இறுதியில் ரூ.50 மற்றும் 60 ஆக உயர்த்தப்பட்டது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு .50 உயர்ந்துரூ.470க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்குரூ.100 உயர்ந்து ரூ.550க்கும், சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ 520க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜோகூர் காஸ்வேயில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக லோரி ஓட்டுநர் மீது வழக்கு
Next articleசபாவில் இந்தாண்டு ஜூலை 2 ஆம் தேதி வரை 1,791 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version