Home மலேசியா போலி பிட்காயின் முதலீடு தொடர்பாக இணையத்தில் தங்களை பெண்கள் போல காட்டிக்கொண்ட ஐந்து ஆண்கள் கைது

போலி பிட்காயின் முதலீடு தொடர்பாக இணையத்தில் தங்களை பெண்கள் போல காட்டிக்கொண்ட ஐந்து ஆண்கள் கைது

காஜாங், ஜூலை 21 :

பிட்காயின் முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் , சமூக வலைதளங்களில் தம்மை பெண்களாக அடையாளப்படுத்திக்கொண்ட ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

புதன்கிழமை (ஜூலை 20) இரவு சுமார் 8 மணியளவில் செராஸின் பத்து 9 இல், நடந்த சோதனையைத் தொடர்ந்து – 23 முதல் 32 வயதுக்குட்பட்ட 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் அசிஸ்ட் கமாம் முகமட் ஜெய்த் ஹசான் கூறினார்.

​​”நாங்கள் வளாகத்தில் இருந்து ஐந்து மடிக்கணினிகள் மற்றும் 16 மொபைல் போன்களை கைப்பற்றினோம்,” என்று இன்று தொடர்புகொண்டபோது அவர் கூறினார்.

சந்தேகநபர்கள், பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைனில் பெண்களாக போஸ் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது, என்றார்.

“சந்தேக நபர்கள் இந்த மோசடிக்கு ஆண்களை குறிவைப்பார்கள். பின்னர் இல்லாத பிட்காயின் முதலீட்டில் முதலீடு செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவார்கள்,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் சுமார் மூன்று மாதங்களாக செயல்பட்டு வருவதாக துணை ஆணையர் முகமட் ஜைட் கூறினார்.

“நாங்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் விசாரணை நடத்தி வருகிறோம்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோசடி செய்பவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், முன் வந்து போலீஸ் புகார்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது விசாரணை அதிகாரி, கண்காணிப்பாளர் தனசீலன் 012-441 6412 என்பவரை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version